ஜிப்சம் - எப்சம் - பாரிஸ் சாந்து

அன்றாட வாழ்வில் வேதியியல் | சிமெண்ட்

ஜிப்சம் :

ஜிப்சம் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு மிருதுவான, நிறமற்ற கனிமப் பொருளாகும். இதன் வேதிப்பெயர் கால்சியம் சல்பேட்டை ஹைட்ரேட். மூலக்கூறு வாய்ப்பாடு - CaSO4. 2H2O.

பயன்கள் :

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் தயாரிக்கப் பயன்படுகிறது
  • பாரீஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது.

எப்சம்
எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு - MgSO4 . 7H2O.
இது பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகின்றது.

பயன்கள்

  • மருத்துவத்துறையில், மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிபடுத்திகளாக எப்சம் பயன்படுகின்றது.
  • மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
  • தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகின்றது.
  • விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.

பாரிஸ் சாந்து

ஒரு மிக நுண்ணிய வெள்ளைப் பொடியாகும் (கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்). இதன் மூலக்கூறு வாயப்பாடு CaSO4, ½H2O.

பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அதிகளவில் கிடைப்பதால் இது பாரிஸ் சாந்து
என அழைக்கப்படுகிறது. 

ஜிப்சத்தினை வெப்பப்படுத்தும் பொழுது, பகுதியளவு நீர்ச்சத்து வெளியேறி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது.

பயன்கள்

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகின்றது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகின்றது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகின்றது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகின்றது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்